ஈஸ்டர் திருநாளான ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 253 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலக மக்கள் தங்களது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முகாமில் தங்கியுள்ள அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். இதில் முகாமைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் முகாமில் உள்ள வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி குண்டுவெடிப்புக்கு கண்டனமும் தெரிவித்தனர்.