ஈரோடு: சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து துப்பரவு பணியாளர்கள் வீதி வீதியாக சென்று கிருசி நாசினி தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.சரணவன் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, துப்பரவு பணியாளர்களிடம் கிருமி நாசனி தெளிப்பு இயந்திரத்தை வாங்கி, வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளித்து கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு