ஈரோடு மாவட்ட காவல் துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் தனியார் மகளிர் கல்லூரியில், மகளிர் தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. ஆபத்து ஏற்படும்போது எப்படி அந்த சூழலை கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர் தொடர்பு எண்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் விபரம், பெண்களுக்கான பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் அடங்கிய செயலியான ‘காவலன்’ அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள், காவலன் செயலியை அலைபேசியில் தரவிறக்கம் செய்தனர்.
இந்த செயலியில், ஆபத்தில் சிக்கிய பெண்கள் கொடுக்கும் தகவலடிப்படையில், அருகாமையிலிருக்கும் காவலர்கள் அவர்களை விரைந்து சென்று மீட்பார்கள். இந்த சிறப்பு செயலியில் கால வரைமுறைகள் எதுவும் இல்லை. 24 மணி நேரமும் உபயோகப்படுத்திடலாம். மாணவிகள் பிறருக்கும் இந்த செயலியை பரிந்துரைக்குமாறு காவல் துறையினர் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் இரவில் சூதாட்டம்: ரூ. 6 லட்சம் பணம், 5 வாகனங்கள் பறிமுதல்