கரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை, மற்றும் பாதுகாப்பினை அளித்துவந்த கராத்தே பயிற்சி வகுப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பயிற்சி வகுப்புகளை நம்பியுள்ள பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாததால் பயிற்சி பெற்று வந்த மாணவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பள்ளி மைதானங்களில் தற்காப்பு கலை வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கிட வேண்டும் என மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் பாடம்