ETV Bharat / state

கட்டையன் யானையை பிடிக்க கபில்தேவ் வருகை.. முத்து கும்கி வந்ததும் ஆபரேஷன் ஸ்டார்ட்!

Forest Department: சத்தியமங்கலம் அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் கட்டையன் யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

elephant
மக்களை அச்சுறுத்திய கட்டையன் யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 6:59 AM IST

Updated : Oct 13, 2023, 7:45 AM IST

த்தியமங்கலம் அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் கட்டையன் யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாயப் பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத்துறையினர் பிடித்து, பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர்.

தற்போது கட்டையன் யானை பவானிசாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, அய்யம்பாளையம், ஜேஜே நகர் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேரத்தில் நுழைந்து தொடர்ச்சியாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இவ்வாறு ஊருக்குள் நுழையும் காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் இருந்து, கபில்தேவ் மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இதில் நேற்று மதியம் முதற்கட்டமாக கும்கி யானை கபில்தேவ் லாரி மூலம் விளாமுண்டி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், கும்கி யானை முத்து வரவழைக்கப்பட்ட பின் கட்டையன் யானையை பிடிக்கும் பணி தொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும், கட்டையன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக வனத்துறையினர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:கடையநல்லூர் தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு அறிவு திறன் வளர்க்கும் போட்டி.. அசத்தல் திறமைகளால் ஆசிரியர்களை வியக்க வைத்த மாணவர்கள்!

Last Updated : Oct 13, 2023, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.