ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் பூக்களை பறித்து சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம். இதனிடையே ஓணம், சுப முகூர்த்த சீசன் வந்ததால் மல்லிகை விலை ரூ.4,000ஐ எட்டியது. அதன்பின் மெல்ல மெல்ல சரிந்து கிலோ ரூ.612ஆக விற்பனையானது.
அதன்பின் இன்றைய மல்லிகைப்பூ விலை ரூ.300ஆக சரிந்துள்ளது. முல்லை பூ விலை கிலோ ரூ.320இல் இருந்து ரூ.100 ஆக சரிந்துள்ளது. அதனால் பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:சுற்றுலாத்துறையின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்