ஈரோடு: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டங்களின்போது வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் பூஜை படையலில், பழங்கள், சுண்டல் போன்றவற்றுடன் பொரியும் வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்தப் பண்டிகையையொட்டி வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு பொரி விற்பனை அதிகரிக்கும் என்பதால் உற்பத்தியும் அதிகரித்தது.
ஆயுதபூஜை விற்பனைக்காக கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான கொண்டையம்பாளையம், கவுந்தபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யும் ஆலைகளில் உற்பத்தியைத் தீவிரப்படுத்தி விற்பனைக்கு வந்துள்ளது.
இங்குத் தயாரிக்கும் பொரியினை சேலம், தருமபுரி, நாமக்கல், வேலூர், திருப்பூர், கோவை, ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு உப்பு பொரி ஒரு மூட்டை ரூ.400 முதல் ரூ.560 வரையிலும், பொரி 450 முதல் 550 வரையிலும் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும், விறகு உள்ளிட்ட எரிபொருள், மின்சார கட்டணம், தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஆனால் பொரி விற்பனை விலை மட்டும், செலவுக்கு ஏற்றவாறு உயரவில்லை.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொரி தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆர்டர்கள் குறைந்துள்தாகவும், சரஸ்வதி பூஜை, ஆயித பூஜை அன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தளர்வுகள் அளிக்கபட்டால் மட்டுமே தங்கள், வாழ்வாதாரம் பாதுகாக்க முடியும் என பொரி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சரஸ்வதி பூஜை: மதுரை மல்லிகையின் விலை அதிகரிப்பு