ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், சிறுவர் ரயில், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
இதனால் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வந்து பொழுது போக்குவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
நேற்று (ஜூலை.11) சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்தவர்கள் அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில் பயணம் என விளையாடி மகிழ்ந்தனர்.
கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக பொதுபணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கில் பவானி சாகருக்கு பொதுமக்கள் வர தடை!