ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயில் நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கிருமி நாசினி அவ்வப்போது தெளிக்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
முடி எடுக்கும் பணியாளர்கள் கைகளுக்கு சானிடைசர் போட்டும் முகக்கசவம் அணிந்தும் பக்தர்களுக்கு முடி எடுத்தனர். மேலும் பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ் மக்களுக்கு விஜய தசமி வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி