ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொலழந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ராமகவுண்டர். இவரது உறவினர்கள் அண்ணன் முத்துச்சாமி, தம்பி மாது.
இதில் முத்துசாமி என்பவர் மீது ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரை விசாரிப்பதற்காக வெள்ளித்திருப்பூர் காவல் துறையினர் முத்துசாமியை வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு வர வைத்துள்ளனர்.
இதனையடுத்து முத்துச்சாமி காவல் நிலையத்திற்கு வரும் போது அவரது தம்பி மாது, உறவினரான சின்ன ராமகவுண்டருடன் வந்து காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்ன ராமகவுண்டரை முதலில் வெட்டியுள்ளார். இதனை பார்த்த முத்துசாமியும் மாதுவும் இதனை தடுக்க சென்ற போது அவர்களுக்கும் லேசான அரிவாள் கீறல்கள் விழுந்து உள்ளன.
உடனடியாக அங்கு வந்த காவலர் அடையாளம் தெரியாத நபரை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அரிவாளால் வெட்டு ஏற்பட்டு பலத்த காயமடைந்த சின்னராம கவுண்டர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக, ஈரோடு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க...மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்