ETV Bharat / state

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எங்கள் முதல் நோக்கம் - அமைச்சர் முத்துசாமி

author img

By

Published : Mar 14, 2022, 8:54 AM IST

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது எங்களது முதல் நோக்கமாக இருக்கிறது, அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது எங்களது முதல் நோக்கம் - அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) கலந்துரையாடல் கூட்டம் நேற்று (மார்ச்.13) பெருந்துறை சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, "கவுன்சிலர்கள் அனைவரையும் சந்தித்து எதிர்கால திட்டங்கள் பணிகள் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

முதலமைச்சரின் ஆலோசனைப்படி பொதுமக்களை வார்டு வாரியாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கவுன்சிலர்களுக்கு உள்ளது. மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகள் குறித்த மனுக்களைப் பதவியேற்ற சில நாட்களுக்குள்ளேயே அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கு சோலார், சக்தி சாலையில் புறநகர் பேருந்து நிலையங்கள் மாடல் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி

பெரியாரால் துவக்கப்பட்ட சிஎன்சி கல்லூரியை அரசுடைமை ஆக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் முழுவதும் அரசுடைமை ஆக்கப்படும். விரைவில் விளையாட்டு திடல் ஐஏஎஸ் அகாடமி நூலகம் உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டு சிஎன்சி கல்லூரி மாவட்டத்தின் அடையாளமாக மாற்றும் பணிகளைச் செய்து வருகிறோம்.

ஈரோடு மாவட்டத்திற்கு 85 திட்டங்கள் குறித்த ஆய்வுப் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் எனவும் விரைவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் SLT சச்சிதானந்தம், திமுகவின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கந்தசாமி மற்றும் முன்னாள் மேயர் குமார் முருகேஷ், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: திருச்சியில் ஜெயகுமாருக்கு உற்சாக வரவேற்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.