ETV Bharat / state

குலசாமியாக காக்கும் ராவுத்தர்..! - இஸ்லாமியரை வழிபடும் கிராமத்தினர் - nattar valipadu

அடைக்கலம் தந்த இஸ்லாமியரை நாட்டார் முறைப்படி குலசாமியாக வழிபடும் பாரம்பரியம், ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்லாமிய மதத்தினரை குலதெய்வமாக வழிபடும் இந்து மதத்தினர்!

author img

By

Published : May 19, 2022, 7:22 PM IST

Updated : May 19, 2022, 8:06 PM IST

ஈரோடு: சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த பெருமக்கள் அப்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கன்னிவாடியில் இருந்து புலம்பெயர்ந்து, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் பகுதிக்கு குடியேறியுள்ளார்கள். அப்போது அங்கே இருந்த திருமணமாகாத இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ராவுத்தர் குமார் ஆகியோர், அங்கே வந்த மக்களுக்கு அடைக்கலம் நல்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

அடுத்த சில காலங்களில் ராவுத்தர் குமார் மரித்துப்போய். இதற்கு பிறகு, அவரை குலசாமியாக நினைத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு நடைபெற்று வரும் இந்த விழாவில், ராவுத்தர் குமார் சிலையை வடிவமைத்து அதற்கு மது பாட்டில்கள் மற்றும் பழ வகைகளுடன் கூடிய அசைவ விருந்து படைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்கள்.

அங்குள்ள முதன்மை கருவறையில் மூன்று சிலைகள் இருக்கிறது. அதில், வலதுபுறம் இருப்பது ராவுத்தர் என்றும், இடதுபுறம் இருப்பது குமார் என்றும், கூறுகிறார்கள். ராவுத்த குமார் என ஒரே பெயரில் கோயில் இருந்தாலும், மூலஸ்தானத்தில் மட்டும் ராவுத்தர், குமார் என இருசிலைகள் உள்ளன. நாட்டார் தெய்வங்களுக்கு நடுவில், தமிழர்களின் ஆதிக்கடவுளான முருகனுக்கும் சிலை உள்ளது.

குலசாமியாக காக்கும் ராவுத்தர்..! - இஸ்லாமியரை வழிபடும் கிராமத்தினர்

திருவிழா நிகழ்ச்சி நிரல்: இதனை வழக்கமாக கொண்டுள்ள காகம் பகுதி மக்களுக்கு ராவுத்தர் தான் கடவுளாக நம்மை காத்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்களது குலதெய்வம் மணலூர் செனாலடி அம்மன். இருந்தாலும், எங்களது மூதாதையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அவரை (ராவுத்தர்) நாங்கள் குலதெய்வமாக வழிபடுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ராவுத்தருக்கு திருவிழா நடத்துகிறோம்.

இந்த திருவிழாவில், வைகாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை அன்று பூச்சாட்டு விழா நடைபெறும். அதற்கு அடுத்த நாளில், புற்றுக்கண் எனக் கொண்டு வரப்படும் மண்ணில் உருவங்கள் செய்து அதனை வழிபடுவோம். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று, சைவ மற்றும் அசைவ விருந்துகளை படைப்போம். இதற்கிடையில், புதன்கிழமை அன்று அம்மை அழைத்தல் என்ற நிகழ்வும் நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று மண்ணால் செய்யப்பட்ட உருவங்களை காவிரியில் கரைத்து விடுவோம். அடுத்த திருவிழாவின்போது, புதிதாக உருவம் செய்வோம்” எனக் கூறுகின்றனர்.

இவ்வாறு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்துக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருவது மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இப்படிப்பட்ட இந்த அதிசய கோவில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் பகுதியில் அமைந்துள்ள ராவுத்தர் குமார சாமி திருக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பண மழை பொழிய வேண்டாம்- சீடர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள்!

Last Updated : May 19, 2022, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.