ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் கனமழை - 5000 வாழை மரங்கள் சேதம் - சத்தியமங்கலத்தில் கன மழை

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பெய்த கன மழையால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

கன மழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்
author img

By

Published : Oct 2, 2019, 7:53 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

கனமழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்

அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் சுமார் 25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு கனமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு உதவி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்!

Intro:Body:tn_erd_04_sathy_valai_damages_vis_tn10009

சத்தியமங்கலத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை:

ரூ.25 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்

சத்தியமங்கலத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. சத்தியமங்கலம், பவானிசாகர், பண்ணாரி, சிக்கரசம்பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யத்தொடங்கிய மழை சுமார் அரைமணி நேரம் கொட்டித்தீர்த்தது. மழையின்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி லிங்கேஷ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500 க்கும் மேற்பட்ட நேந்திரன் ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோல் விவசாயி மணி என்பவரது தோட்டத்தில் 500 வாழை மரங்களும், செல்வராஜ், என்பவரது தோட்டத்தில் 1000 வாழை மரங்களும், விவசாயி சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 1000 வாழை மரங்கள் என பெரியகுளம் மற்றும் வரதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளதால் சுமார் 25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் இப்பகுதியில் 3 தென்னை மரங்கள், வேப்பமரங்களும் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. சூறாவளிக்காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்த வாழை மரங்களும் வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வாழை மரங்களுக்கு தனிநபர் காப்பீடு போல் புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.