ETV Bharat / state

கழுகு பார்வையில் காவிரி ; கடல் போல் காட்சியளிக்கும் பவானி - Bhavani looks like the sea

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கழுகு பார்வையில் காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கு; கடல் போல் காட்சியளிக்கும் பவானி

author img

By

Published : Aug 5, 2022, 12:48 PM IST

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

குறிப்பாக பவானியில் உள்ள காவிரி வீதி, கந்தன் தெரு, செம்படவர் வீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் நகர், ஆகிய பகுதிகளில் 100 வீடுகளுக்கும் மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருக்கும் பொருட்களான கேஸ் சிலிண்டர், பிரிட்ஜ் மற்றும் உபயோகப் பொருட்களை பரிசல்கள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் கந்தன் பட்டறை, காமராஜர் நடுநிலைப்பள்ளி, 24 மனை தெலுங்கு செட்டியார் மண்டபம், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கழுகு பார்வையில் காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கு; கடல் போல் காட்சியளிக்கும் பவானி

இவர்களுக்கு திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின் வயர்கள் செல்லும் இணைப்புகளை அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பவானி பழைய பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தபட்டது. காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் கழுகு பார்வை காட்சியில் பவானி கடல் போல காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 6,700 கன அடி நீர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.