தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கு முக்கிய வழித்தடமாக ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாதை வழியாகப் பயணிப்பதால் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஆசனூர், பண்ணாரியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கர்நாடக இடையே பயணிக்கும் இரு மாநில வாகனங்களைச் சோதனைச்சாவடியில் தடுத்துநிறுத்தி வாகன தணிக்கை செய்யப்படுகிறது.
கர்நாடகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து வரும் வாகனங்களைக் காவல் துறையினர் முகச்கசவம், கையுறைகளை அணிந்து சோதனைசெய்தனர். அதேபோல், ஆசனூர் மதுவிலக்கு காவல் துறையினரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து போலீசார் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்!