ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகள் தகுந்த இடைவெளியுடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவக் குழு பரிந்துரைப்படி நடைமுறைபபடுத்தப்படும். தனிநபர் இடைவெளியுடன் தான் தேர்வுகளும் நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் உயர் கல்விக்கு மாணவர்கள் செல்லமுடியும் என்பதால், பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...மலேசியா டூ திருச்சி: தாயகம் திரும்பிய 177 தமிழர்கள்!