ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள காசிபாளையம் பேரூராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகள் தான் தேர்ச்சி செல்லும். அதை நிரந்தரமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
மலை கிராமங்களிலும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நிதி நெருக்கடி காரணமாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடியாத நிலை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர் செங்கோட்டையன்