ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தையொட்டி தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர், சூசைபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள கிராம மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் செய்துவருகின்றனர். சில வாரங்களாக தாளவாடி வனத்தைவிட்டு வெளியேறிய சிறுத்தை, தொட்டகானூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட அச்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பீம்ராஜ் நகர் பகுதியில் விவசாயி மணி என்பவரது ஆட்டை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. வனத்துறையினரும் கால் தடங்களை வைத்து சிறுத்தை தாக்கி கொன்றதை உறுதி செய்தனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் தோட்டங்களுக்கு செல்ல தயங்கியதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளனர் .
இதையும் படிங்க: