தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகள் பராமரித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். அப்போது பயன்பாடின்றி புதர் மண்டிய விவசாய கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த பசு எதிர்பாராதவிதமாக 80 அடி ஆழத்தில் தவறிவிழுந்தது. பசு மாட்டின் சப்தம் கேட்டு விவசாயி நாகராஜ் ஆசனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 80 அடி கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கினார்கள். உயிருக்கு போராடிய மாட்டில் உடலில் பாதுகாப்பாக கயிறு கட்டி பத்திரமாக மேலே மீட்டனர். மாட்டை பரிசோதனை செய்ததில் லேசான காயம் இருப்பது தெரியவந்தது. அங்கு வந்த தனியார் கால்நடை மருத்துவர் மாட்டை பரிசோதனை செய்து நல்ல நிலையில் இருப்பதகாவும், லேசான காயத்துக்கு மருந்து அளித்தார். பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.