ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்பகுதியின் மத்தியில் பவானி ஆறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில், நேற்று பாலத்தின் மீது நடந்து சென்றுகொண்டிருந்த 20 வயதுள்ள இளைஞர் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது ஆற்றில் 3,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீரின் வேகம் இளைஞரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை