ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள எல்லபாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் தனது 8, 7 ஆகிய வயதுடைய இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கடந்த 2016ஆம் ஆண்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குருநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட குருநாதனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு - 109 பேர் கைது!