ETV Bharat / state

சசிகலா- ஒபிஎஸ் விவகாரம்; நழுவிய செங்கோட்டையன் - செங்கோட்டையன்

சசிகலா குறித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து தான் எந்தக் கருத்தையும் வெளியிடத் தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Oct 27, 2021, 12:01 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதி அருகே படகு சவாரி செய்யும் இடம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று நேற்று (அக்.26) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவே தமிழ்நாடு அரசைப் புகழ்ந்து பேசுவதாகத் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறினார். என்னை பற்றிக் கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

செங்கோட்டையன்

நான் பேசிய கருத்துகளே வேறு. யாரையும் நான் புகழ்ந்து பேசவில்லை. அவருக்குத் தெரிந்தால் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். எந்தக் காலத்திலும் நான், எம்ஜிஆர். ஜெயலலிதா சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசி இருக்கிறேனே தவிர இவர்கள் சொன்னது போன்று இல்லை.

இவர்கள் வேண்டுமானால் இடத்திற்குத் தகுந்த போல மாறலாமே தவிர எங்களிடம் அந்த நிலை இல்லை. சசிகலா குறித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து நான் எந்த கருத்தையும் வெளியிடத் தயாராக இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அக்.30 ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.