ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராமபயலூர் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் தொட்டி உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இப்பகுதியில் ஆடுமாடு வளர்ப்பு, கூலி வேலை செய்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 4 கிமீ தூரத்தில் உள்ள வடவள்ளி அங்கன்வாடி மையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்வதால் குழந்தைகளை வடவள்ளிக்கு அழைத்து செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் வசிக்கும் இருப்பிடத்துக்கும் அங்கன்வாடி மையத்துக்கும் இடையே காட்டாற்று பள்ளம் செல்வதால் குழந்தைகளை பெற்றோர் நடைபயணமாக அழைத்து செல்லமுடியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலை சூழல் ஏற்படுவதால் பெரும்பாலான குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்வதில்லை. குழந்தைகள் வசிக்கும் தொட்டி பகுதியிலேயே மூடியிருக்கும் ஊரக பராமிப்பு மேம்பாட்டு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்து பயனடைவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க...கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்