ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, ஓசூர் சாலையில் ரங்கசாமி என்பரது நகைக்கடை உள்ளது. இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
நேற்று வழக்கமான நேரத்தில் கடையைத் திறக்காமல் காலதாமதாக நகைக்கடையை திறக்கச் சென்று பார்த்தபோது அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டரை திறந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை திருட்டப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் கடையில் விற்பனைக்குத் தயாராக இருந்த கம்மல், செயின், மூக்குத்தி போன்ற நகைகளும் திருடுபோயுள்ளன. வெள்ளி, பணம் ஆகியவற்றை மட்டும் திருடர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதனால் ரங்கசாமி அளித்த புகாரின்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் கைரேகைகளைப் பதிவுசெய்து விசாரித்தனர். கடையில் சிசிடிவி கேமரா இல்லாததைத் திருடர்கள் பயன்படுத்தித் திருடியுள்ளனர். இதையடுத்து தாளவாடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. அண்மையில் பீமாபுரத்தில் மண்டி உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருடுபோனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாகரசம்பட்டியில் மூன்று வீடுகளில் ரூ.25 லட்சம் தங்க நகைகள் கொள்ளை