நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் அதிகமாக பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக உள்ளது. இதில் ஈரோட்டில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் ஈரோடு மாவட்ட எல்லையில் பலத்த பாதுகாப்பு, சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்திற்குள் புதிதாக நுழையும் வெளிமாநில, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நுழைவதைக் கண்காணித்திடவும், சோதனை செய்திடவும் நவீன ரோந்து வாகனங்களின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க...மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தளர்வு: தலைமைச் செயலர் கடிதம்