ETV Bharat / state

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களை தன்னார்வ பணிக்கு அழைத்த எஸ்பி - சத்தியமங்கலம் ஊரடங்கு செய்திகள்

ஈரோடு: கோவிட்-19 ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் ஆட்டோ ஓட்டுநர்களை தமிழ்நாடு-கர்நாடகா இரு மாநில எல்லையில் தன்னார்வலர்களாக பணியாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களை தன்னார்வ பணிக்கு அழைத்த எஸ்பி

author img

By

Published : May 9, 2020, 6:33 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் கரோனா நோய்த்தடுப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் ஆட்டோ தொழில் முடங்கிப் போனது. ஆட்டோ தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்துவருகின்றனர்.

இதையடுத்து சத்தியமங்கலத்தில் பணியாற்றும் 141 ஆட்டோ தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் தலா ரூபாய் 750 மதிப்புள்ள நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நிவாரண பொருள்களை வழங்கி உரையாற்றினார்.

அப்போது, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் தன்னார்வலர்களாக பணியாற்ற அழைப்பு விடுத்தார். சோதனை சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கரோனா பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உதவியாக செயல்படவும் அழைப்புவிடுத்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.