ETV Bharat / state

காவலரின் மனைவி பிரசவத்திற்கு உதவிய எஸ்.பி., - குவியும் பாராட்டுகள் - erode latest news

ஈரோடு: கரோனா நேரத்தில் காவலரின் மனைவியின் பிரசவத்திற்கு உதவிகளை செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து காவலரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

erode sp applauded for aided another police's wife delivery
காவலரின் மனைவி பிரசவத்திற்கு உதவி மாவட்ட எஸ்.பி. - காவலர்கள் பாராட்டு!
author img

By

Published : May 30, 2020, 10:55 AM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 2 ஆயிரத்துக்கு 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் மாதேஷ் என்பவர் கரோனா பணியில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது அவரது மனைவி சவிதாமணி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சில தொகைகளை கட்ட மருத்துவமனை கூறியுள்ளது. இதனையடுத்து கரோனா பாதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மருத்துவமனைக்கு தேவையான தொகையை வெளியில் எங்கு கேட்டும் கிடைக்காததால் காவலர் மாதேஷ் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷை சந்தித்து தனது சூழ்நிலையை விளக்கினார்.

காவலரின் நிலைமையை புரிந்து கொண்ட சக்தி கணேஷ், அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு காவலர் மாதேஷின் மனைவிக்கு பிரசவம் பாருங்கள் என்றும் அதற்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதனை அவரே செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மாதேஷை மருத்துவமனையில் குடும்பத்துடன் இருக்குமாறு கூறி அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து காவலர் மாதேஷுக்கு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், அவரது சொந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளார். அதைத் தொடர்ந்து காவலர், அவரது மனைவி, பிறந்த கை குழந்தையுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் இந்த மனிதநேயமிக்க செயலால் மகிழ்ச்சி அடைந்த காவலர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள இளைஞருக்கு வேப்பமரத்தடியில் சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.