ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் கூண்டு வைத்து நேற்று (ஜூன் 30) பிடித்தனர். கூண்டின் அடிபாகம் சேதமடைந்ததால் சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தி வேறு ஒரு கூண்டுக்கு மாற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
மயக்க நிலையில் இருந்த சிறுத்தை திடீரென தப்பியோடியது. வனத்துறையினர் சிறுத்தையை தேடி பார்த்தபோது குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதைப் பிடித்தனர். இந்த நிகழ்வை படம் பிடித்த தாளவாடி தினசரி பத்திரிகையாளர் கணேசன், தாளவாடி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முருகானந்தம் ஆகியோரை வனத்துறையினர் தாக்கியதுடன் செல்போனை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்தநிலையில் இன்று(ஜூலை 1) பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கம் மற்றும் தாளவாடி ஆசனூர் வனச்சரக அலுவலகம் முன் 18க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் தேவேந்திரா குமார் மீனாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தெங்குமரஹாடா வனப்பகுதியில் சிறுத்தை விடுவிப்பு!