ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி பணிகள்: மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு இடையூறாக உள்ள சாலைகளை அடைக்க முயற்சி

ஈரோடு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு இடையூறாக உள்ள சாலைகளை அடைக்க முற்பட்ட மாநகராட்சி அலுவலர்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

erode people besieging corporation officials for Smart City works

author img

By

Published : Jul 23, 2020, 6:24 PM IST

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஜவுளிச் சந்தை வளாகம், வணிக வளாகம், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுவருகின்றன.

ஆர்.கே.வி. சாலைப் பகுதியில் நடைபெற்றுவரும் இந்தப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுவதாகவும் ஜின்னா வீதியை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜின்னா வீதியைச் சேர்ந்த மக்கள், மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி வீதியை அடைத்தது கண்டிக்கத்தக்கது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, தற்காலிகமாக மட்டுமே வீதியை அடைத்திருப்பதாகவும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்ததும் சாலை வழக்கம்போல இயங்கும் என உறுதியளித்தனர். இருப்பினும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்ததை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி அலுவலர்கள் கூறியதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.