ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதன் மூலமாக இரண்டாயிரத்து எழுநுாற்று எழுபத்தி ஒன்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தல் நேரடி மற்றும் மறைமுகமாக நடைபெறுகிறது. நேரடித் தேர்தல் மூலமாக, இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபத்தி நான்கு உறுப்பினர்களும், மறைமுகத் தேர்தல் மூலமாக இருநூற்று ஐம்பத்து ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
மொத்தம் உள்ள வார்டுகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பத்தொன்பது பதவிகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு நூற்று எண்பத்து மூன்று பதவிகளும், சிற்றூராட்சித் தலைவருக்கு இருநூற்று ஐம்பத்து ஐந்து பதவிகளும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இருநூற்று தொண்ணூற்று ஏழு பதவிகளும் என மொத்தம் இரண்டாயிரத்து ஏழுநுாற்று எழுபத்து ஒன்பது உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தோ்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நூற்று இருபத்தி ஐந்து பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து எண்பத்து ஏழு பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு ஆயிரத்து முன்னூற்று நாற்பத்து ஒன்று பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்தாயிரத்து ஏழுநூற்று நாற்பது பேரும், மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிக்க :திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்!