ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமையில் வினோதா, ராஜேந்திரன் இருவரும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி விஐபி கார்டனில் 1,800 சதுர அடி உள்ள மணி என்பவருக்குச் சொந்தமான வீட்டினை விற்பனை செய்வதற்காக, கடந்த ஜூலை மாதத்திலிருந்து நாங்கள் பலரிடம் அவ்விடத்தைக் காட்டிவந்தோம்.
அதில், இருதயராஜ் என்பவரைக் கூட்டிச் சென்று காண்பித்தோம். அவர்கள் பல மாதம் என்னை அலைக்கழித்து இப்போது வீடு வேண்டாம் என்றனர்.
இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மணி, நாங்கள் அழைத்துச் சென்ற இருதயராஜ் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நேரடியாக வீட்டினை 40 லட்சத்திற்கு விலைபேசி கிரையம் செய்துகொண்டனர்.
இந்தத் தகவல் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. எங்களிடம் அனைத்து விவரங்களையும், வேலைகளையும் வாங்கிக்கொண்டு தரகு 80 ஆயிரம் ரூபாய் தராமல் ஏமாற்றுகின்றனர்.
எனவே, இடத்தரகர்கள் தொழிலை நம்பி வாழ்வாதாரம் செய்யும் எங்களை ஏமாற்றியவர்களிடமிருந்து தரகுத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: இருவர் கைது!