ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: 4 பேர் கைது!

ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு திருட்டு  ஈரோடு வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு  Erode Theft  Erode House Theft  வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு 4 பேர் கைது  Four people arrested for breaking into lock of house and theft
Erode House Theft
author img

By

Published : Apr 28, 2020, 1:11 PM IST

ஈரோடு சூளை ஈபிபி நகர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் சொந்தமாக கார்மென்ட்ஸ் ஒன்றை நடத்திவருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி மொடக்குறிச்சியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து இளங்கோவின் மாமியார் சரஸ்வதி கடந்த 20ஆம் தேதி இளங்கோவின் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், இளங்கோ அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து ஆறு சவரன் நகை, பல ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகளை கொண்டு விசாரனை மேற்கொண்டனர். அதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் வந்து இளங்கோ வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

பின்னர், நான்கு பேரையும் காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், எல்லப்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் மேட்டூர் ஆண்டிக்காட்டைச் சேர்ந்த கனகராஜ்(38), நங்கவள்ளியைச் சேர்ந்த ஏழுமலை(28), ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த கவுதம்(18), தாராபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(24) ஆகியோர் என்பதும், இளங்கோ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நால்வரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆறு சவரன் நகையை மீட்டு, இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:சாராயம் காய்ச்ச வெல்வேள் மரத்தினை வெட்டியவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.