ETV Bharat / state

ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:46 PM IST

Erode Government Hospital: ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode Government Hospital
ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்

ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்!

ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கடந்த சில வருடங்களாக ஊதிய உயர்வு, வார விடுமுறை, பிஎஃப், இஎஸ்ஐ, உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறுவனத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை நிறுவனம் எவ்வித கோரிக்கைகளும் நிறைவேற்றாததால், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோரிக்கைகள்: கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய செயல்முறை ஆணைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பேரிலும், நாள் ஒன்றுக்கு பணியாளர்களுக்கு ரூ.724 ஊதியமாக வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 2022-2023 ஆம் ஆண்டுக்கான போனஸாக குறைந்தபட்சம் ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

மேலும், வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ESI, PF போன்ற திட்டம் ஏற்படுத்த வேண்டும். இதரப் பணிகளுக்கு பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது குறித்து தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் 111வது கிளை இன்று (டிச.15) திறப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.