ETV Bharat / state

கோவில் நிலத்தை விற்க எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - ஈரோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: பெருந்துறை அருகேயுள்ள பழமையான கரியபெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பேரூராட்சிக்கு விற்பனை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கிராமப் பகுதி மக்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிவைத்து கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode Formers protest
Erode Formers protest
author img

By

Published : Sep 6, 2020, 4:19 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவாச்சி பகுதியில் மிகவும் பழமையான கரியபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 4.59 ஏக்கர் நிலம் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பேரூராட்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்திட இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குடிநீர்த் தேவைக்காக எனக் கூறி குளம் அமைத்து ராட்சத குழாய்களைப் பதித்து மின்மோட்டார்கள் மூலம் கீழ்பவானி கால்வாய் கசிவு நீரை அப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறி, கோயில் இடத்தை பேரூராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கீழ்பவானி கால்வாய் கசிவு நீரை மின்மோட்டார்கள் மூலம் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்வதால் கீழ்பவானி கால்வாய் கசிவு நீரை நம்பி பாசனத்தை மேற்கொண்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதாலும், பெரும்பள்ள ஓடைக்கான நீர்வரத்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமென்பதால் இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பேரூராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், பேரூராட்சியின் குளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் திருவாச்சியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிவைத்து கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கிராம மக்களின் அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது, தனியார் சிலரது நலனுக்காக கோயில் நிலத்தை பேரூராட்சி நிர்வாகம் தவறாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது, இந்துசமய அறநிலையத்துறை கோயில் இடத்தை விற்பனை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும், பேரூராட்சி நிர்வாகம் குளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

மேலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியபெருமாள் சாமியிடம் மனு கொடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோயில் நிலத்தை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக தங்களிடம் உறுதியளித்திடும் வரை தங்களது போராட்டம் பல்வேறு வடிவங்களில் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.