ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாமலுதின் மகன் சர்பூதின். இவர் ஈரோடு ரயில்வே பார்சல் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்ஜெனக் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.
ஜான்ஜெனக்குக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது செல்ஃபோனில் முகநூல் மூலம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் நட்பாக பேசியுள்ளார். இதனை அறிந்த சா்பூதின், மனைவியை ஆண்களுடன் பேசக்கூடாது என கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி சர்பூதின் வீட்டிற்கு வந்தபோது, ஜான்ஜெனக் மீண்டும் முகநூல் மூலம் அவரது நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதைக்கண்டு சர்பூதின் அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த சர்பூதின் சட்டை பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.
அப்போது, ஜான்ஜெனக்கின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சூரம்பட்டி காவல் துறையினர் ஜான்ஜெனக்கிடம் விசாரணை நடத்தி, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சர்பூதினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: