ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையத்தைச் சேர்ந்தவர் குமார்(31). இவர், வாடகை கார் ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவியும், திவாஸ் (6) என்ற மகனும் உள்ளனர்.
வீட்டிலிருந்து செல்போனில் பேசியபடியே குமார் வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு குமார் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் ரத்த கறையுடன் சாக்கு மூட்டை கிடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அதில் குமார் தலை, உடலில் அரிவாளால் வெட்டியபடி கொலை செய்யப்பட்டு இருந்தார்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு தரைமட்டமானது... பெண் மரணம்! வீடு கட்டிக் கொடுத்ததாக பணத்தை உண்டு ஏப்பம் விட்ட அரசு அலுவலர்கள்!