ETV Bharat / state

ஈரோட்டில் 80 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி!

ஈரோடு: மாவட்டத்தின் முக்கியத் தொழிலான ஜவுளித் தொழில் நிறுவனங்கள், ஜவுளிச் சந்தைகள் திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியுள்ளார்.

ஆட்சியர் சி.கதிரவன்
ஆட்சியர் சி.கதிரவன்
author img

By

Published : May 14, 2020, 10:35 PM IST

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்புகள் குறைந்ததற்குப் பிறகு, அறிவிக்கப்பட்ட தளர்வில் தனிக்கடைகள் திறப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சிப் பகுதியில் அனுமதியளிக்கப்பட்ட கடைகளின் செயல்பாடு குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈஸ்வரன் கோவில் வீதிப் பகுதி உள்ளிட்டப் பகுதிகளில், அனுமதி வழங்கப்பட்ட கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார். குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட கடைகளில், குளிர்சாதன வசதி இயக்கப்பட்டிருந்தால், அந்தக் கடைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், 'ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக நோய்த்தொற்று பாதிப்பில்லாததால், மாவட்டம் முழுவதும் 80 விழுக்காடு தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது. 40 முதல் 50 விழுக்காடு தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன' எனத் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ஈரோடு ஆட்சியர், 'வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஈரோட்டிற்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனைக்குப் பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் மாநகராட்சிக்கு வெளியே செயல்பட்டு வந்த 80 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆன ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளிச் சந்தைகள் திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.

இதையும் பார்க்க: தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம்: எட்டு கட்சிகள் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.