ETV Bharat / state

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கரோனா!

author img

By

Published : Aug 21, 2020, 3:47 PM IST

Updated : Aug 21, 2020, 9:53 PM IST

Erode collector kathiravan
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன்

15:44 August 21

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆட்சியர் கதிரவன் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் நேற்று கலந்து கொண்டார். இதையடுத்து அவர் தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இந்த பரிசோதனையில் அவருக்கு அறிகுறிகள் அற்ற கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 

மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் தற்போது தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதலே கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாவட்டம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை கண்காணித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: வீடு வாடகைக்கு கேட்பது போல் மூதாட்டியிடம் செயின் பறிப்பு - இளம்பெண் கைது

Last Updated : Aug 21, 2020, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.