ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

ஈரோடு
ஈரோடு
author img

By

Published : Feb 27, 2023, 6:31 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடந்தது. பரிசீலனையில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 6 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்ளிட்டோர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 25ஆம் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அதன்பிறகு தொகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தனர்.

20 நாட்களுக்கும் மேலாக விழாக்கோலம் பூண்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது. பரபரப்பாக காணப்பட்ட முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய, விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் 'விவிபேட்' கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று (பிப்.26) நடந்தது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மினி லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பேனா, விரலில் வைக்கப்படும் அழியாத மை, வாக்காளர் பட்டியல் உள்பட 81 வகையான பொருட்களும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு வாக்குச்சாவடி தலைமை அதிகாரி முன்னிலையில் கட்டுப்பாட்டு கருவிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபேட் கருவியும் பொருத்தப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பப்படும். அங்கு மார்ச் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க: புவிசார் குறியீடு: சர்வதேச கவனம் பெறும் ராமநாதபுரம் 'முண்டு வத்தல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.