ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 105 அடியுடன் நீடிக்கிறது. இதன்மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, மிருகால், திலோபி, கரிமீன் உள்ளிட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் 20 லட்சம் மீன்குஞ்கள் விடப்பட்டுள்ளன. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 200 டன் மீன்கள் இருப்பு உள்ளது.
இந்நிலையில், அணையிலிருந்து பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன்களை மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில், கிலோ ரூ.150, ரூ.100 என்கிற அடிப்படையில் விற்கப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம், பவானிசாகர், ஈரோடு, புளியம்பட்டி, திருப்பூர் பகுதியில் இருந்து மீன்வாங்க கூட்டம் குவிந்தது. அதிக கூட்டம் காரணமாக ஒரு நபருக்கு தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் பிடிக்கும் மீன்கள் ரசாயன பொருட்களின்றி சத்துள்ளதாக இருக்கும் என்பதால் அதனை வாங்க மக்கள் ஆர்வம்காட்டினர்.
இதையும் படிங்க: மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...?