ETV Bharat / state

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் - இன்று நிறைவு - Elephant enters farming land

ஈரோடு: சத்தியமங்கலம் தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து சேதப்படுத்தியதில் நூற்றுக்கும் மேல் வாழைகள் நாசமாகியுள்ளன.

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்
author img

By

Published : Apr 9, 2019, 1:40 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புத்துணர்வு முகாம் இந்தாண்டு மிகவும் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி 24 யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த யானைகளுக்கு காலை மாலை ஊட்டச்சத்துமிக்க பழ வகைகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டுவந்தன.

48 நாட்கள் பராமரிக்கப்பட்டு வந்த இந்த வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்த புத்துணர்வு முகாம் நிறைவு நிகழ்ச்சிக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார். தற்சமயம் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

நாளை முதல் புலிகள் காப்பகத்தில் உள்ள 24 யானைகளுக்கும் இனி வழக்கம்போல் உணவு வழங்கப்படும் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்:
100 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்

TN_ERD_SATHY_01_08_VALAI_ELEPHANT_VIS_TN10009
(FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் அடுத்த கரிதொட்டம்பாளையம் ராமசாமி என்பவரின் தோட்டத்துக்கு காட்டுயானைகள் புகுந்து அங்கு  சாகுபடி செய்த வாழைகள் யானைகள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வனத்துறை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, தீவனசோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் பவானிசாகர் வனத்தை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் கரிதொட்டம்பாளையம் கிராமத்திற்கும் நுழைந்து விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஆந்திரா ரஸ்தாளி ஆகிய வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்து விவசாயிகள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் புகுந்ததால் 100 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தன. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வெட்டப்பட்ட அகழி மேடாக இருப்பதால் யானைகள் எளிதாக வனப்பகுதியை விட்டு வெளியேறுவதாகவும் எனவே அகழியை ஆழம் மற்றும் அகலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
--

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.