ETV Bharat / state

ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை -போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை
author img

By

Published : May 27, 2019, 10:10 AM IST

ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீர் நிரம்பியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆசனூரில் இருந்து அரேப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் வழியே செல்லக் கூடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசனூரில் பலத்த மழை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு  

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_03_27_SATHY_ASANUR_FLOOD_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இன்று மாலை பலத்த மழை பெய்தது தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள ஓடைகள் பள்ளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதன் காரணமாக ஆசனூரில் இருந்து அரேப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின்  மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தரைப்பாலத்தை முழ்கடித்படி காட்டாற்று வெள்ளம் ஒடியதால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.