சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் வசிக்கும் காட்டுயானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம். யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது.
யானை நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த யானை ஊருக்குள் புகுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் வனத் துறையினர் தற்போது 4 குழுக்களாக பிரிந்து ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்துவருகின்றனர்.
பவானிசாகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சாலையோரம் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கக் கூடாது என அறிவுறுத்திவருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் யாரும் சாலையோர வனப்பகுதியில் அமர்ந்து உணவருந்தக் கூடாது என்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை