ETV Bharat / state

முதலமைச்சர் குறித்த தவறான பதிவு: திமுக பிரமுகர் சிறையில் அடைப்பு - slander post against TN CM palanisamy

ஈரோடு: சமூக வலைதளங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான செய்தியைப் பதிவிட்ட திமுக பிரமுகர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

DMK functionary
DMK functionary
author img

By

Published : Jun 21, 2020, 9:24 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, கரோனா குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மகேந்திரன் பழனிசாமி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தவறான செய்தியைப் பரப்பியுள்ளார்.

இது குறித்து புகார் எழுந்த நிலையில், மகேந்திரன் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னிமலை காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : டிவிஎஸ் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.