உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர்.
அதனால் அக்கோயிலில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை சார்பில், கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் அங்கு பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பக்தர்கள் சோதனைக்குப் பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள்