ETV Bharat / state

ஈரோடு நகர காவல் நிலையத்தில் டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு!

ஈரோடு: கோயம்புத்தூர் சரகத்தில் 4 காவல் நிலையங்கள் முதலமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

DIG Narendran inspection in erode police station

author img

By

Published : Nov 7, 2020, 10:19 PM IST

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதலமைச்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, கோயம்புத்தூர் சரகத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் நான்கு சிறந்த காவல் நிலையங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

DIG Narendran inspection in erode police station
டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு

அதில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வுசெய்யப்பட்ட ஈரோடு நகர காவல் நிலையத்தில் கோயம்புத்தூர் சரக டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில், கடந்தாண்டு பதிவான வழக்குகள், நிலுவை வழக்குகள், சாலை விபத்துகளைத் தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீதான உடனடி நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்யப்பட்டன.

இதையும் படிங்க... பவானிசாகர் வனத்தில் குடற்புழு நோயால் பெண் யானை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.