ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இம்மலைப்பாதை வழியாக இருமாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்மழை பெய்து வரும்நிலையில், திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவிவருகிறது. இதன்காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர்.
இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் விலகியபின் போக்குவரத்து சீராகும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக கடம்பூர், கே.என்.பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்கு நோபல் வெற்றியாளர் பாராட்டு