ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு, அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த வகையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடா நிலையில் பிறந்த தீரன் சின்னமலையின் நினைவு நாளை போற்றும் வகையில், ஆடிப்பெருக்கென்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அரச்சலூர் ஓடா நிலையில் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன், மாநகராட்சி மேயர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!