ஈரோடு: சத்தியமங்கலம் புதுவடவள்ளியில் செயல்பட்டு வரும் தமிழக சிறப்பு இலக்குப்படை முகாமில் தமிழகக் காவல்துறை டிஜிபி சி.சைலேந்திர பாபு நேற்று (டிச.12) ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கடம்பூர், திம்பம் பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு முகாம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை, மறைந்திருந்து தாக்குதல், மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தல் மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாகத் தமிழகம், கர்நாடகா, கேரளா அதிரடிப்படையை ஒருங்கிணைந்து வனத்தேடுதல் வேட்டை நடத்துவது என்றும் இதற்காக ஒருங்கிணைந்த முகாம்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அதிரடிப்படை தலைவர் எஸ்.முருகன், கண்காணிப்பாளர் பி.ராஜன் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம்