ETV Bharat / state

சந்தேக மரணம்; அடக்கம் செய்த உடல் தோண்டப்பட்டு உடற்கூறாய்வு! - தொண்டுதல்

ஈரோடு: ஆசனூர் அருகே மர்மமான முறையில் இறந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

Death of suspect; Re-excavated body
author img

By

Published : Jul 30, 2019, 5:23 AM IST

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(24). இவர், தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற அவரது மனைவி, மீண்டும் வராததால் தனியே இருந்து வந்த கணேசன், கடந்த ஒருமாதமாக தனது தாத்தா சேதுராமன் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு கோட்டை கிராமத்தில், கணேசன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, கணேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேக மரணம்; மீண்டும் தோண்டப்பட்ட அடக்க உடல்

இந்நிலையில், பிரபு இரும்புக் கம்பியால் அடித்ததால் கணேசன் உயிரிழந்ததாக அவரது தாத்தா சேதுராமன், ஆசனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழுவினரை வரவழைத்து அடக்கம் செய்த உடலை தோண்டியெடுத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:Body:tn_erd_05_sathy_murder_case_vis_tn10009
tn_erd_05a_sathy_murder_case_photo_tn10009
tn_erd_05b_sathy_murder_case_photo_tn10009

சத்தியமங்கலம் அருகே சந்தேக மரணம்: புகாரின் பேரில் அடக்கம் செய்யப்பட்ட உடலை 13 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே மலைகிராமத்தில் கடந்த 16 ம் தேதி இறந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொடுத்த புகாரின்பேரில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(24). கணவனும் மனைவியும் சத்தியமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற கீதா மீண்டும் வீட்டிற்கு வராததால் தனியே இருந்துவந்த கணேசன் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு ஆசனூர் அருகே கோட்டாடை மலை கிராமத்தில் உள்ள தனது தாத்தா சேதுராமன் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி இரவு கோட்டை கிராமத்தில் கணேசன் தனது உறவினரான ஒசட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரும் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணேசன் பிரபுவிற்கு சொந்தமான டெம்போ கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது கீழே விழுந்த கணேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடந்த 17 ம் தேதி கணேசனின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபு கணேசனை தலையில் இரும்புக்கம்பியால் அடித்ததால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் பிரபு மீது சந்தேகள் உள்ளதாகவும் தனது பேரன் கணேசனை அடித்து கொலை செய்திருக்கலாம் என பிரபு மீது நடவடிக்கை எடுக்க கோரி கணேசனின் தாத்தா சேதுராமன் ஆசனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திங்கள்கிழமை கோவை அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழுவினரை வரவழைத்து அடக்கம் செய்த உடலை தோண்டியெடுத்து பிரேதப்பரிசோனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.